செல்போன் அடிக்கடி ஹேங்க் ஆகுதா.. ரீஸ்டார்ட் செய்தால் வேகம் அதிகரிக்குமா?

ஸ்மார்ட்போன்கள் செயலிகள் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்ளும் போதும் செல்போனை ரீஸ்டார்ட் செய்வது ஒரு தற்காலிக தீர்வாக உதவியாக இருக்கும். போனை ரீஸ்டார்ட் செய்யும்போது பின்னணியில் தேவையற்ற முறையில் இயங்கும் செயலிகள் மற்றும் தற்காலிக மென்பொருள் கோளாறுகள் சரியாகி அதன் வேகம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வது போனின் நிரந்தர வேகத்தை அதிகரிக்காது என்பதால், தேவையற்ற செயலிகளை நீக்குவது மற்றும் மென்பொருளை புதுப்பிப்பது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதே சிறந்தது.




கருத்துகள் (0)