ரூ.30 ஆயிரம் சம்பளம் தராததால் ஒப்பந்ததாரரின் காரைத் திருடிய தொழிலாளி? 6 மாதங்களுக்குப் பிறகு கைது!

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அனுப் (39), ஒப்பந்ததாரர் நந்துவிடம் வேலை செய்து வந்துள்ளார். வேலை சரியாகச் செய்யவில்லை என்ற காரணத்தால், அவருக்கு ரூ.30 ஆயிரம் சம்பளப் பணம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனுப், ஒப்பந்ததாரர் நந்துவின் காரைத் திருடிச் சென்றதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அனுப்பைத் தேடி வந்தனர். சுமார் 6 மாதங்களாக அவரைத் தேடி வந்த நிலையில், தற்போது அவரைக் கைது செய்துள்ளனர். சம்பளப் பணம் தொடர்பான தகராறில் கார் திருடப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)