திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் 1,461 பாசன ஏரிகள் வறண்டன.. குடிநீர் ஆதாரங்களிலும் நீர் இருப்பு குறைவு!

தமிழகத்தில் 1,461 பாசன ஏரிகள் வறண்டன.. குடிநீர் ஆதாரங்களிலும் நீர் இருப்பு குறைவு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், நீர்நிலைகளின் இருப்பு குறைந்து வருகிறது. வழக்கமான மழை அளவுடன் ஒப்பிடும்போது இதுவரை 13% குறைவாக மழை பதிவாகியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பாசன ஏரிகளிலும் நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் மொத்தம் 14,141 பாசன ஏரிகள் உள்ளன. அவற்றில் 1,461 ஏரிகள் தற்போது நீரின்றி வறண்ட நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவில் 36.40 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போதைய இருப்பு 81.65 டி.எம்.சி.யாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளிலும் நீர் அளவு குறைந்துள்ளது. நகருக்கு குடிநீர் வழங்கும் 6 ஏரிகளிலும் சேர்த்து தற்போது 5.27 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் பருவமழை பெய்து நீர்நிலைகளின் இருப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.