புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
அரசியல்

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

 

 

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான மும்முனை மின்சாரம் முறையாகக் கிடைக்காததால், டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். விதைத்த பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தில் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் டெல்டா பகுதி விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களை உடனடியாக வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை தினகரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், பயிர்ச் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.