புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திருமண வரவேற்பில் மதுபோதையில் தகராறு: மணப்பெண், அவரது தந்தை மீது தாக்குதல் புகார்!

திருமண வரவேற்பில் மதுபோதையில் தகராறு: மணப்பெண், அவரது தந்தை மீது தாக்குதல் புகார்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரீத்தாபுரத்தைச் சேர்ந்த 31 வயது ராணுவ வீரரும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணும் நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ரீத்தாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

அப்போது மதுபோதையில் இருந்த புதுமாப்பிள்ளை, மணப்பெண்ணின் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் மணப்பெண்ணையும் அவரது தந்தையையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த இருவரும் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.