திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 8-ல் தீபாவளி ஆஸ்தானம்! முக்கிய ஆர்ஜித சேவைகள் ரத்து!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் நவம்பர் 8-ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி, மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சர்வ பூபால வாகனத்தில் தங்க வாசலில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற உள்ளன.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடைபெறும். அதன்பிறகு சுவாமி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதன் காரணமாக அன்றைய தினம் சில முக்கிய ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.




கருத்துகள் (0)