ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு சமர்ப்பித்த அறிக்கையில், காவல்துறை விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகையும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசின் விளக்கத்தைப் பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கில் மேற்கொண்டு தனது கண்காணிப்பு தேவையில்லை எனக் கூறி விசாரணைக் கண்காணிப்பை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்துள்ளது.




கருத்துகள் (0)