துப்பாக்கியுடன் ஆக்ரோஷமான தோற்றம்! ‘சீன்’ படத்தில் சூர்யாவின் புதிய போஸ்டர் வைரல்!

ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் டிஎஸ்பி இன்பராஜ் என்ற அதிரடியான, வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்ட காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உடைந்த அறைக்குள் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாகக் காட்சியளிக்கும் சூர்யாவின் புதிய போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போஸ்டரைப் பகிர்ந்து வருகின்றனர்.




கருத்துகள் (0)