‘ஜெயிலர் 2’ படத்தை இணையத்தில் வெளியிடத் தடை! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியாவதைத் தடுக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், திரைப்படத்தை அனுமதியின்றி இணையதளங்கள் மற்றும் கேபிள் சேவைகள் மூலம் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே திருட்டுப் பிரதிகள் இணையத்தில் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை கோரப்பட்டிருந்தது. இதன் மூலம் ‘ஜெயிலர் 2’ படத்தின் சட்டவிரோத வெளியீட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)