துருக்கியில் கனமழையால் கடும் வெள்ளம்: 4 பேர் உயிரிழப்பு; பலர் காயம்!

துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் மற்றும் சாலைகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சரியீர் மாவட்டத்தில் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளநீர் சூழ்ந்த இடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




கருத்துகள் (0)