60 ஆண்டுகளாக முடி வெட்டாத 83 வயது முதியவர்.. 20 அடி நீளத்திற்கு வளர்ந்த ஜடாமுடி!

வியட்நாமின் பென் ட்ரே மாகாணத்தைச் சேர்ந்த 83 வயது குயென், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது தலைமுடியை வெட்டாமல் வளர்த்து வருகிறார். அவருக்கு 18 வயதாக இருந்தபோது ஏற்பட்ட தலைவலிக்கு முடி வெட்டியதே காரணம் என அவர் நம்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் தலைவலி வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தலைமுடியை வெட்டுவதைத் தவிர்த்ததுடன், முடியைச் சுத்தம் செய்வதையும் நிறுத்திவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, அவரது தலைமுடி சுமார் 20 அடி நீளத்திற்கு வளர்ந்து, பாம்பு போன்ற வடிவத்தில் ஜடாமுடியாக மாறியுள்ளது.
நீண்ட தலைமுடியைச் சுமப்பது சிரமமாக இருந்ததால், 1990ஆம் ஆண்டு முதல் அவர் புத்தர் கோயில் ஒன்றில் தங்கி ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. பல தசாப்தங்களாகத் தலைமுடியை வெட்டாமல் பராமரித்து வரும் அவரது வாழ்க்கை முறை, தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.




கருத்துகள் (0)