புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: ஒக்கியம் மடுவு கால்வாயில் முதல்வர் விஜய் ஆய்வு!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: ஒக்கியம் மடுவு கால்வாயில் முதல்வர் விஜய் ஆய்வு!

 

 

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒக்கியம் மடுவு கால்வாயில், முதல்வர் விஜய் இன்று (அக்.14) நேரில் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மழைநீர் வெளியேற்றும் வசதிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

 

கனமழை பெய்யும்போது பள்ளிக்கரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்குவது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், ஒக்கியம் மடுவு கால்வாயின் செயல்பாடு மற்றும் மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.