புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு வெள்ளை அங்கி, ஸ்டெதஸ்கோப் வழங்கிய அமைச்சர் அருண்ராஜ்!

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு வெள்ளை அங்கி, ஸ்டெதஸ்கோப் வழங்கிய அமைச்சர் அருண்ராஜ்!

 

 

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 89-வது மருத்துவ இளநிலை மாணவர் வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்று, 2026–27 கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள புதிய மாணவர்களை வரவேற்றார். நிகழ்ச்சியின்போது மாணவர்களுக்கு மருத்துவப் பணியின் அடையாளமாகக் கருதப்படும் வெள்ளை அங்கி மற்றும் ஸ்டெதஸ்கோப் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மரிய வில்சன், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.விஜய் தாமு, கல்லூரி முதல்வர் டாக்டர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, புதிய மாணவர்களுடன் அமைச்சர் செல்ஃபி வீடியோவும் எடுத்துக்கொண்டார். மருத்துவக் கல்வியில் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ள மாணவர்களுக்கு இந்த வரவேற்பு நிகழ்ச்சி உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்தது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.