வீட்டிலேயே செய்யலாம் குற்றாலம் ஸ்பெஷல் நாட்டுக்கோழி சுக்கா!

குற்றாலம் பகுதியில் பிரபலமான சுவையான நாட்டுக்கோழி சுக்காவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். இதற்கு முதலில் சுத்தம் செய்த நாட்டுக்கோழியுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான மசாலா தூள்களைச் சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும்.
பின்னர் தேங்காய், கசகசா, முந்திரி, மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்து விழுதாகத் தயாரித்து, வேகவைத்த கோழியுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இறுதியாக நல்லெண்ணெய் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி மிதமான தீயில் சுவை சேரும் வரை வதக்கி இறக்கினால் சுவையான குற்றாலம் ஸ்பெஷல் நாட்டுக்கோழி சுக்கா தயார். இதனை பரோட்டா, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.




கருத்துகள் (0)