புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
இந்தியா

யூடியூப் வீடியோவை நம்பி தங்கம் தேடிச் சென்றவர்! சுரங்கத்திற்குள் சிக்கியதால் பரபரப்பு!

யூடியூப் வீடியோவை நம்பி தங்கம் தேடிச் சென்றவர்! சுரங்கத்திற்குள் சிக்கியதால் பரபரப்பு!

 

 

ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ராமகிரி மலையில் தங்கம் இருப்பதாக யூடியூப்பில் வெளியான தகவலை நம்பி, பிரபாகர் ரெட்டி என்பவர் அதைத் தேடிச் சென்றுள்ளார். நள்ளிரவில் கயிற்றைக் கட்டிக்கொண்டு சுரங்கத்திற்குள் இறங்கிய அவர், அங்கு காற்றோட்டமும் வெளிச்சமும் இல்லாமல் சிக்கித் தவித்துள்ளார். இதனால் அவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 

இதையடுத்து, அவருடன் சென்ற நண்பர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு பிரபாகர் ரெட்டி பத்திரமாக மீட்கப்பட்டார். ஆபத்தை உணராமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதற்காக அவரையும் அவரது நண்பரையும் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.