2027 பொங்கல் முதல் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்களா? வெளியான தகவலால் எதிர்பார்ப்பு!

2027 ஜனவரி பொங்கல் பண்டிகை முதல், ‘அன்னப்பூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்கள், விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும், பயனாளிகளை அடையாளம் காண எரிவாயு நிறுவனங்களிடமிருந்து வாடிக்கையாளர் விவரங்கள் சேகரிக்கப்படுவதாகவும், சிலிண்டருக்கான முழுத் தொகையும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்பு மற்றும் தகுதி விதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.




கருத்துகள் (0)