தமிழகத்தின் 3 முக்கிய துறைமுகங்களில் ரூ.1,100 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்களில் ரூ.1,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புதிய கிடங்குகள் அமைப்பது மற்றும் சொகுசுக் கப்பல் முனையத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எண்ணூர் துறைமுகத்தில் ரூ.261 கோடி செலவில் நிலக்கரி கையாளும் தளமும், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.517 கோடி மதிப்பில் புதிய கன்டெய்னர் முனையமும் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது துறைமுகங்களின் சரக்குக் கையாளும் திறன் அதிகரிப்பதுடன், கடல்வழி வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)