சமூக வலைதளங்களில் அதிரடி சலுகை விளம்பரம்! புதுச்சேரியில் மதுபானக் கடைக்கு சீல்!

வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்த புதுச்சேரி மதுபானக் கடை மற்றும் ரெஸ்டோ பாருக்கு கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மதுபானம் வாங்குவோருக்கு இலவசமாக பீர் மற்றும் உணவு வழங்கப்படும் என விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது.
கலால் விதிமுறைகளை மீறி இத்தகைய சலுகைகளை அறிவித்ததாகக் கூறி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மேலும், விதிகளைப் பின்பற்றாமல் செயல்படும் மதுபானக் கடைகள் மற்றும் ரெஸ்டோ பார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால் துறை எச்சரித்துள்ளது.




கருத்துகள் (0)