410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரக விண்கல் கண்டுபிடிப்பு.. தண்ணீர் இருந்ததற்கான தடயங்கள்!

2022-ம் ஆண்டு சகாரா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த விண்கல் சுமார் 410 கோடி ஆண்டுகள் பழமையானது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த அரிய விண்கல், செவ்வாய் கிரகத்தின் தொடக்ககால புவியியல் அமைப்பு மற்றும் வரலாறு குறித்து புதிய தகவல்களை வழங்கியுள்ளது.
மேலும், இந்த விண்கல்லை உருவாக்கிய பாறைகள் ஒரு காலத்தில் தண்ணீருடன் வேதியியல் வினைபுரிந்ததற்கான தடயங்களும் ஆய்வில் தெரியவந்துள்ளன. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் பண்டைய காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் குறித்து விஞ்ஞானிகள் கூடுதல் தகவல்களைப் பெற்றுள்ளனர்.




கருத்துகள் (0)