புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அமைச்சர் நிர்மல்குமாருக்கு அதிமுக சட்ட நோட்டீஸ்; ரூ.1 கோடி இழப்பீடு கோரிக்கை!

அமைச்சர் நிர்மல்குமாருக்கு அதிமுக சட்ட நோட்டீஸ்; ரூ.1 கோடி இழப்பீடு கோரிக்கை!

 

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்புவதாகக் கூறி, அமைச்சர் நிர்மல்குமாருக்கு அதிமுக சார்பில் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவின் சொத்துகளைக் கைப்பற்ற இபிஎஸ் திட்டமிட்டு வருவதாக அமைச்சர் தவறான தகவல்களைப் பரப்புவதாக அந்த நோட்டீஸில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில், அக்கட்சியின் வழக்கறிஞர் இன்பதுரை இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். அதில், சம்பந்தப்பட்ட கருத்துகளுக்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.