சிதம்பரத்தில் திமுகவிலிருந்து விலகிய இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திமுகவிலிருந்து விலகிய இளைஞர்கள் பலர், பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா முன்னிலையில் இன்று (அக். 14) பாஜகவில் இணைந்தனர். சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சியிலிருந்து வந்த இளைஞர்களுக்கு பாஜக கட்சித் துண்டுகளை அணிவித்து அவர் வரவேற்றார்.
இந்த இணைப்பு நிகழ்வு சிதம்பரம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. திமுகவிலிருந்து இளைஞர்கள் விலகி பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கட்சியில் இணைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் விலகியதற்கான காரணங்கள் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.




கருத்துகள் (0)