திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
சினிமா

அமெரிக்காவில் பிரியங்கா சோப்ரா வீட்டில் கோலாகல தீபாவளி விருந்து! பங்கேற்ற ஹாலிவுட் பிரபலங்கள்!

அமெரிக்காவில் பிரியங்கா சோப்ரா வீட்டில் கோலாகல தீபாவளி விருந்து! பங்கேற்ற ஹாலிவுட் பிரபலங்கள்!

இந்தியப் பண்டிகையான தீபாவளியை வெளிநாட்டிலும் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது கணவர் நிக் ஜோனஸுடன் வசித்து வரும் அவர், தங்களது இல்லத்தில் அண்மையில் பிரம்மாண்டமான தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்திய பாரம்பரியத்தையும் பண்டிகையின் சிறப்பையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

 

குறிப்பாக, பிரபல யூடியூபர் லில்லி சிங், மாடல் வின்னி ஹார்லோ, நடிகை ஆஷ்லே பார்க் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த விருந்தில் கலந்துகொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அமெரிக்காவில் உள்ள சர்வதேச பிரபலங்களுடன் இணைந்து கொண்டாடிய இந்த நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விருந்தினர்களுடன் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.