ரிலையன்ஸ் நிறுவனத்துடன் அஜித் ரேஸிங் அணி கூட்டணி! 9 புதிய பிஸ்கட் விளம்பரங்களில் அஜித் படம்!

நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘இண்டிபென்டன்ஸ் பவர்அப்’ என்ற பிராண்டுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. விளையாட்டுத் துறையையும் வர்த்தகத்தையும் இணைக்கும் வகையில் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது.
இண்டிபென்டன்ஸ் பிராண்டின் கீழ் புதிதாக 9 வகையான பிஸ்கட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் புதிய தயாரிப்புகளுக்கான விளம்பரங்களில் நடிகர் அஜித்குமாரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அஜித்தின் ரேஸிங் அணிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையே உருவாகியுள்ள இந்தப் புதிய ஒப்பந்தம், அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.




கருத்துகள் (0)