அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரூ.167 கோடி போனஸ்! 1.06 லட்சம் பணியாளர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 2025-26-ம் நிதியாண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த மொத்தம் 1,06,001 பணியாளர்களுக்கு ரூ.167.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், இந்தத் தொகை இன்று சம்பந்தப்பட்ட பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இந்தப் பணப்பலன் கிடைத்திருப்பது போக்குவரத்துக் கழகப் பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.




கருத்துகள் (0)