தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தப்பட்டனரா? நவம்பர் 16-க்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி, வரும் நவம்பர் 16-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இதற்காக தேனி, கடலூர், மதுரை, சேலம் மற்றும் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர்களுக்கு விசாரணைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறையில் உள்ள 17 கைதிகளையும் நேரடியாகச் சந்தித்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு கைதியின் உடலிலும் காயங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் முழுமையாகப் பரிசோதித்து, விசாரணையில் தெரியவரும் விவரங்களைத் தொகுத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அறிக்கையாக அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)