செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சென்னை பொது அஞ்சலகத்தில் நவம்பர் 6-ல் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்!

சென்னை பொது அஞ்சலகத்தில் நவம்பர் 6-ல் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்!

சென்னை பொது அஞ்சலகம் சார்பில், அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் குறைதீர்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் வரும் 2026 நவம்பர் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

 

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள பொது அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில், அஞ்சலக சேவைகள் தொடர்பான புகார்கள் மற்றும் தங்களது ஆலோசனைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நேரில் வந்து தங்களது குறைகளை எடுத்துரைக்கலாம் அல்லது அஞ்சல் மூலமாகவும் புகார் மற்றும் கருத்துகளை அனுப்பலாம் எனத் தபால்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.