“சில நேரங்களில் அது நான்தானா என்றே தெரியவில்லை” – ஏஐ தவறான பயன்பாடு குறித்து ஸ்ரேயா சரண் கவலை!

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரேயா சரண், தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்புவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலிப் படங்கள் சில நேரங்களில் உண்மையான புகைப்படங்களைப் போலவே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “சில நேரங்களில் அது நான்தானா என்றே தெரியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி மாற்றிப் பகிர்வது கவலைக்குரிய பிரச்சினை என்றும், தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)