‘பிரேக்கிங் பேட்’ நடிகர் மறைவு: பிரையன் உருக்கமான அஞ்சலி!

பிரபல ‘பிரேக்கிங் பேட்’ தொடரில் நடித்த RJ மிட் அக்.12 அன்று உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அந்தத் தொடரில் அவருக்குத் தந்தையாக நடித்த நடிகர் பிரையன், சமூக வலைதளத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்புதான் இருவரும் மீண்டும் சந்திப்பது குறித்து பேசியதாக பிரையன் தெரிவித்துள்ளார். அந்தச் சந்திப்பு நடந்திருந்தால் அவரது வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்குமா என்பது தனக்குத் தெரியவில்லை என்றும், ஆனால் RJ மிட்டைத் தான் மிகவும் நேசித்தது மட்டும் உறுதி என்றும் அவர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.




கருத்துகள் (0)