இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயில் தயாரிப்பு தீவிரம்! மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும்!

இந்தியாவில் அதிவேக ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் புல்லட் ரயில் பெட்டிகளை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள BEML நிறுவனத்தில் இதற்கான உற்பத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டு ரயில்களைச் சார்ந்திருக்காமல், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயிலை இயக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தப் புதிய புல்லட் ரயில் மணிக்கு அதிகபட்சமாக 280 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. மொத்தம் 8 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 557 பயணிகள் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த அதிவேக ரயில் திட்டம், இந்திய ரயில்வே துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீண்ட தூரப் பயணங்களுக்குத் தேவைப்படும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்து, பயணிகளுக்கு விரைவான போக்குவரத்து வசதியை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைய உள்ளது.




கருத்துகள் (0)