திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
இந்தியா

மனைவியை 170-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தரிக்கோலால் குத்திய கணவர்! பீகாரில் அதிர்ச்சி சம்பவம்!

மனைவியை 170-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தரிக்கோலால் குத்திய கணவர்! பீகாரில் அதிர்ச்சி சம்பவம்!

பீகார் மாநிலத்தில் மனைவி மீது சந்தேகம் கொண்ட பங்கஜ் என்பவர், அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அவரது மனைவி ராக்கி, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இனிமேல் தன்னைத் துன்புறுத்தவோ, தாக்கவோ மாட்டேன் என உறுதியளித்த பங்கஜ், ராக்கியை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

 

ஆனால், வீட்டிற்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே பங்கஜ் தனது மனைவியைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், கத்தரிக்கோலைப் பயன்படுத்தி ராக்கியின் உடலில் 170-க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.