வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

வெளிநாட்டில் முதுகலை படிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.36 லட்சம் நிதியுதவி!

வெளிநாட்டில் முதுகலை படிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.36 லட்சம் நிதியுதவி!

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் படிப்புகளைத் தொடர விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

இத்திட்டத்தின் மூலம் பொறியியல் மற்றும் கலை அறிவியல் ஆகிய இரு பிரிவுகளிலும் தலா 25 மாணவர்கள் என மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தகுதியான மாணவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.