செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
இந்தியா

காதல் திருமணத்தால் ஆத்திரம்: உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை!

காதல் திருமணத்தால் ஆத்திரம்: உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை!

 

 

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தைச் சேர்ந்த நேஹா (20), பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாற்றுச் சாதியைச் சேர்ந்த சாவன் என்பவரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தினர் அவரைத் திரும்பி வருமாறு அழைத்தபோதும், கணவருடன் சேர்ந்து வாழ்வதில் நேஹா உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

இதனால் கடும் ஆத்திரமும் மன உளைச்சலும் அடைந்த அவரது தந்தை பிரகாஷ் சிங், தன் பேச்சை மீறிச் சென்ற மகள் தங்களுக்கு உயிரிழந்துவிட்டதாகக் கருதி, அவருக்கு முறைப்படி இறுதிச்சடங்கு செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயிருடன் இருக்கும் மகளுக்குத் தந்தையே இறுதிச்சடங்கு செய்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.