செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
இந்தியா

5 கிலோ ‘சோட்டு’ கேஸ் சிலிண்டரைத் திருப்பிக் கொடுத்தால் ரூ.500! இந்தியன் ஆயில் சிறப்புச் சலுகை!

5 கிலோ ‘சோட்டு’ கேஸ் சிலிண்டரைத் திருப்பிக் கொடுத்தால் ரூ.500! இந்தியன் ஆயில் சிறப்புச் சலுகை!

 

 

இந்தியன் ஆயில் நிறுவனம், 5 கிலோ எடை கொண்ட ‘சோட்டு’ எல்பிஜி சிலிண்டர்களைத் திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 திருப்பி வழங்கும் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சலுகையின்படி, சிலிண்டரின் தேய்மானத்தைக் கணக்கில் கொள்ளாமல் நிலையான தொகையாக ரூ.500 வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, பேச்சிலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

 

இந்தத் தொகையைப் பெற, சேதமடையாத சிலிண்டருடன் அசல் சந்தா சீட்டு மற்றும் அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் இந்தியன் ஆயில் விற்பனை மையங்களை அணுகி பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சலுகையின் தற்போதைய நடைமுறை, தகுதி நிபந்தனைகள் மற்றும் அருகிலுள்ள விற்பனை மையங்களில் கிடைக்கும் வசதி ஆகியவற்றை உறுதிப்படுத்திய பின்னர் சிலிண்டரை ஒப்படைப்பது நல்லது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.