கேரளாவில் காட்டுப்பன்றிகள் தாக்கி மூதாட்டி பலி; 3 பேர் படுகாயம்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் இடவன்னா பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது காட்டுப்பன்றிக் கூட்டம் திடீரென பாய்ந்து தாக்கியது. இந்தத் தாக்குதலில் 60 வயதான பாத்திமா என்ற மூதாட்டி உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த அமைச்சர் பி.கே. பஷீர், உயிரிழந்த பாத்திமாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், பாத்திமாவின் குடும்பத்திற்கு ரூ.14 லட்சம் அரசு நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். காட்டுப்பன்றிகளின் திடீர் தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




கருத்துகள் (0)