ஞாயிறு, அக்டோபர் 11, 2026
உண்மையின் குரல்
இந்தியா

ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவி மர்ம மரணம்: தண்டவாளத்தில் சடலமாக மீட்பு!

ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவி மர்ம மரணம்: தண்டவாளத்தில் சடலமாக மீட்பு!

 

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 23 வயது கல்லூரி மாணவி இமாஸ்ரீ போரோ, ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அக்டோபர் 6-ம் தேதி இரவு ரயிலில் ஏறிய இமாஸ்ரீ, தனது தோழியிடம் தன்னைச் சுற்றி ஆண்கள் இருப்பதாகவும், பயமாக இருப்பதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அக்டோபர் 7-ம் தேதி கவுகாத்தி ரயில் நிலையத்தில் மாணவி காணாமல் போனது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

 

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே ரயில் தண்டவாளத்தில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சடலம் இமாஸ்ரீயினுடையதுதான் என்பதை அவரது பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளனர். மாணவியின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.