கேரளாவில் திருமணமான சில மாதங்களில் இளம்பெண் உயிரிழப்பு; வரதட்சணை மரணம் என வழக்குப்பதிவு!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சாலக்குடி அருகே 22 வயதான எமில்டா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி, கணவர் அஃப்சலின் வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட எமில்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கணவர் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக எமில்டா தனது தோழிகளிடம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும், சம்பவத்தின் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொண்ட போலீசார், வரதட்சணை மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கணவர் அஃப்சலைக் கைது செய்துள்ளனர். இளம்பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் அவருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் துன்புறுத்தல்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)