திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
இந்தியா

LGBTQ இன்ஃப்ளூயன்ஸர் மேட் சந்து கொலை வழக்கு: குஜராத்தில் 9 பேர் கைது!

LGBTQ இன்ஃப்ளூயன்ஸர் மேட் சந்து கொலை வழக்கு: குஜராத்தில் 9 பேர் கைது!

 

 

பஞ்சாபைச் சேர்ந்த பிரபல LGBTQ இன்ஃப்ளூயன்ஸரும் மேக்கப் கலைஞருமான மேட் சந்து, கடந்த அக்டோபர் 3ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், குஜராத்தில் பதுங்கியிருந்த 9 பேரைக் கைது செய்துள்ளனர். இந்தக் கொலையின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

மேட் சந்து, பஞ்சாப் கலாசாரத்தைச் சீர்குலைப்பதாகக் கூறி, அவருக்குச் சமீபகாலமாக சமூக வலைதளங்கள் வாயிலாகக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆன்லைன் மிரட்டல்களுக்கும் கொலைச் சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களின் பங்கு மற்றும் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணையின் முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.