செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

கிளினிக் வரவேற்பறையில் நோயாளியின் கையில் வெடித்த செல்போன்! குழந்தையுடன் இருந்த பெண் உட்பட பலர் பதற்றத்தில் ஓட்டம்!

கிளினிக் வரவேற்பறையில் நோயாளியின் கையில் வெடித்த செல்போன்! குழந்தையுடன் இருந்த பெண் உட்பட பலர் பதற்றத்தில் ஓட்டம்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள திருஷ்டி கிளினிக்கில், நோயாளி ஒருவரின் கையில் இருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலோசனைக்காக கிளினிக்கிற்கு வந்திருந்த அந்த நோயாளி, வரவேற்பறையில் அமர்ந்து தனது மொபைல் போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென செல்போனில் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியது. இதைக் கவனிப்பதற்குள் அடுத்த சில நொடிகளில் போன் பலத்த சத்தத்துடன் வெடித்துத் தீப்பிடித்தது.

 

இதனால் காத்திருப்பு அறை முழுவதும் தீப்பொறிகளும் புகையும் பரவின. செல்போன் வெடித்த இடத்திற்கு அருகிலேயே ஒரு பெண் தனது பிறந்த குழந்தையுடன் அமர்ந்திருந்ததாகவும், மேலும் பல நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உயிர் தப்புவதற்காக அங்கிருந்து அவசரமாக வெளியேறினர். இதற்கிடையில், ஆபத்தை உணர்ந்த அந்த நோயாளி எரிந்துகொண்டிருந்த செல்போனை உடனடியாகத் தூக்கி எறிந்தார். கிளினிக்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

 

Video link : 

https://twitter.com/nextminutenews7/status/2117248903527751942/video/1 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.