செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மின்வெட்டைத் தவிர்க்க அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் விளக்கம்!

மின்வெட்டைத் தவிர்க்க அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் விளக்கம்!

 

 

ஒன்றிய மின் தொகுப்பிலிருந்து என்.எல்.சி. நிறுவனம் மூலம் கிடைக்க வேண்டிய 1,850 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், காற்றின் வேகம் குறைந்ததால் வழக்கமாகக் கிடைக்க வேண்டிய 3,000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்துக்குப் பதிலாக 500 மெகாவாட் மட்டுமே கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழகத்தில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ள நிலையில், மின் பற்றாக்குறையைச் சமாளித்து மின்வெட்டைத் தவிர்ப்பதற்காகவே வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இந்த ஏற்பாட்டைச் செய்யாவிட்டால் மின்வெட்டை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.