செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
சினிமா

மராத்தி நடிகை மதூ காம்பிகர் (வயது 73) காலமானார்!

மராத்தி நடிகை (மதூ காம்பிகர் வயது 73) காலமானார்!

 

 

மராத்தி திரையுலகின் மூத்த நடிகையும், புகழ்பெற்ற நடனக் கலைஞருமான மதூ காம்பிகர் (73), நீண்டகால உடல்நலப் பாதிப்பால் புனேவில் நேற்று உயிரிழந்தார். நாடக மேடைகளில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் மராத்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

 

மகாராஷ்டிரத்தின் பாரம்பரிய லாவணி நடனக் கலையைப் பிரபலப்படுத்துவதில் மதூ காம்பிகர் முக்கியப் பங்காற்றினார். ‘ஷாபித்’, ‘ஏக் ஹோதா விதூஷக்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். கடந்த 2016-ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவு மராத்தி கலைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.