நயன்தாரா அரசியலுக்கு வருவாரா? விக்னேஷ் சிவன் சொன்ன பதில்!

உலக உணவு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன், பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது, 2031ஆம் ஆண்டு தேர்தலில் நடிகை நயன்தாரா அரசியலுக்கு வருவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா தற்போது குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். குடும்ப வாழ்க்கையில் கிடைக்கும் நிறைவு இப்போதைக்குப் போதுமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், நயன்தாராவின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு விக்னேஷ் சிவன் நேரடியான உறுதிப்பாட்டை அளிக்காமல் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசியுள்ளார்.




கருத்துகள் (0)