லடாக் எல்லைப் பகுதிகளுக்கு இந்தியா புதிய பெயர்கள்: சீனா கடும் எதிர்ப்பு!

லடாக் எல்லைப் பகுதியில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட 28 இடங்களுக்கு இந்தியா புதிய பெயர்களைச் சூட்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இந்தியா–சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இரு நாட்டு ராணுவத்தினரும் மோதலில் ஈடுபட்ட பகுதியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் பெயரிடும் நடவடிக்கைக்கு சீன வெளியுறவுத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தை இந்தியா தன்னிச்சையாக உருவாக்கியதாகக் கூறி, அதனை அங்கீகரிக்கவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதிகளுக்குப் புதிய பெயர்களைச் சூட்டும் இந்தியாவின் நடவடிக்கையை ஏற்க முடியாது என்றும் அந்நாடு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)