செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
இந்தியா

தீபாவளியை முன்னிட்டு ரயில் நிலையங்கள், ரயில்களில் பாதுகாப்பு தீவிரம் – விதிகளை மீறினால் 3 ஆண்டுகள் சிறை!

தீபாவளியை முன்னிட்டு ரயில் நிலையங்கள், ரயில்களில் பாதுகாப்பு தீவிரம் – விதிகளை மீறினால் 3 ஆண்டுகள் சிறை!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில் பயணத்தின்போதும், ரயில் நிலையங்களிலும் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது எனப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறி பட்டாசுகள் அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.