திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம்: 96 குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு!

புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம்: 96 குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் உள்ள பழைய குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 3.82 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள 96 குடியிருப்புகளை இடிப்பதற்காக வீட்டு வசதி வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கை அங்குள்ள மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்பதால், இடிப்பு தொடர்பான டெண்டரை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மீனவ கிராம பஞ்சாயத்து சபை வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.