தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு!

'முரசு' புயல் தீவிரமடைந்து வரும் சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக சில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்று இரவு 7 மணி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழை எச்சரிக்கையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பகுதிகளில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வானிலை நிலவரத்தைக் கவனித்து பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




கருத்துகள் (0)