செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
ஆன்மிகம்

வீட்டில் செல்வ வளமும் மன அமைதியும் பெருக வேண்டுமா? காலை, மாலை விளக்கேற்றுவதன் ஆன்மீக சிறப்பு!

வீட்டில் செல்வ வளமும் மன அமைதியும் பெருக வேண்டுமா? காலை, மாலை விளக்கேற்றுவதன் ஆன்மீக சிறப்பு!

இந்து மரபுப்படி, வீடுகளில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை அறையில் விளக்கேற்றுவது மங்களகரமான செயலாகக் கருதப்படுகிறது. இதனால் இல்லத்தில் இறை அருள் நிறைந்து, நேர்மறையான சூழல் உருவாகும் என்பது ஆன்மீக நம்பிக்கை. குறிப்பாக, அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்திலும், மாலை சூரியன் மறையும் சந்தியா காலத்திலும் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானதாக ஆன்மீக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுவதும், மாலை சூரிய அஸ்தமனத்தை ஒட்டிய சுமார் 6 மணி அளவில் தீபம் ஏற்றி வழிபடுவதும் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு தினமும் இறைவனை வழிபட்டு விளக்கேற்றுவதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை, மன நிம்மதி மற்றும் செழிப்பு அதிகரிக்கும் என்றும், மகாலட்சுமியின் அருள் கிடைத்து செல்வ வளம் பெருகுவதுடன் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும் என்றும் பக்தர்களிடையே ஐதீகம் நிலவுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.