நியாயவிலைக் கடையில் கழிவுநீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம்? தென்காசியில் விசாரணை தொடக்கம்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வடமலைப்பட்டி நியாயவிலைக் கடையில், கழிவுநீர் கலந்த மண்ணெண்ணெய் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. கடையில் விநியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெயின் தரம் குறித்து மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நரசிம்மன் கூறுகையில், புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விசாரணை முழுமையாக முடிவடைந்த பின்னர், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.




கருத்துகள் (0)