தீபாவளிக்கு முன் பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் ரூ.8.20 லட்சம் கோடி லாபம்!

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இந்தியப் பங்குச்சந்தையில் வரலாறு காணாத வகையில் வலுவான ஏற்றம் பதிவானது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு ஒரே நாளில் 2,116 புள்ளிகள் உயர்ந்து 79,418 என்ற நிலையை எட்டியது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடும் 609 புள்ளிகள் அதிகரித்து 24,570 புள்ளிகளாக வர்த்தகமானது.
இந்த அதிரடி உயர்வின் காரணமாக முதலீட்டாளர்களின் மொத்த சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் ரூ.8.20 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வந்தது ஆகியவை பங்குச்சந்தையின் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.




கருத்துகள் (0)