வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 1% உயர்வு; இரண்டாவது சிறந்த கரன்சியாக முன்னேற்றம்!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 1% உயர்வு; இரண்டாவது சிறந்த கரன்சியாக முன்னேற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 1 சதவீதம் உயர்ந்து மீண்டுள்ளது. சர்வதேச நாணயச் சந்தையில் ரூபாயின் இந்த முன்னேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

 

குறிப்பாக, டாலருக்கான தேவையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனமடைந்தது ஆகியவை ரூபாயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

 

இன்றைய வர்த்தக நேர முடிவில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.47 ஆகப் பதிவானது. இந்த முன்னேற்றத்தின் மூலம் சர்வதேச நாணயச் சந்தையில் அதிக செயல்திறன் காட்டிய இரண்டாவது கரன்சியாக இந்திய ரூபாய் இடம்பிடித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.