தீபாவளிக்கு டாஸ்மாக்கில் 4 புதிய பீர் வகைகள் அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.250!

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 20 புதிய மதுபான வகைகளை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இளைஞர்களைக் கவரும் நோக்கில் பிர்ரா, ஹெய்னகென் சில்வர், சிம்பா ரோர் மற்றும் லோன் உல்ப் ஆகிய நான்கு புதிய பீர் ரகங்கள் முதற்கட்டமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
இந்த நான்கு வகை பீர்களும் முதலில் 'எலைட்' டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இவற்றின் ஆரம்ப விலை ரூ.250 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பீர் வகைகள் விற்பனைக்கு வருவதன் மூலம், டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மொத்த பீர் ரகங்களின் எண்ணிக்கை 25-ஆக அதிகரிக்க உள்ளது.




கருத்துகள் (0)